கே. வி. குப்பம், வேலூர் மாவட்டம் காங்குப்பம் கிராமம் பிரசித்துப் பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை சுயம்பு மகாதேவர் சாமி கோயிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று காலை காமாட்சி அம்மன் , மகாதேவர் , விநாயகர், ஆஞ்சநேயர், சிவன், மகிஷாசுரமர்த்தினி பத்ரகாளி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்க உள்ளது. மகானந்த சித்தர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்து, பக்ததர்களுக்கு அருள் ஆசி வழங்கிறார். மேலும் பக்தர்கள் மகாதேவர் மலையில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலூர் -மகாதேவமலை குடியாத்தம் -மகாதேமலை, ஆற்காடு -மகாதேவ மலை வரை பக்தர்களுக்கு இலவச பஸ் , பக்தர்களின் இருசக்கர வாகனங்கள் இலவசமாக பார்க்கிங் செய்வதற்கு மகாநந்த சித்தர் தான தர்ம அறக்கட்டளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருகிறது.