கேவி குப்பத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
கேவி குப்பத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கே. வி. குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பம்பு ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ஆர். உமாபதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எஸ். ரமேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சியில் செய்யும் பணிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வை ஊராட்சி மன்றத் தலைவர்கள் வழங்கவேண்டும். பணிப்பதிவேடு, குடும்பக் காப்பீடு தொடங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் என். ஜோதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி