குடியாத்தத்தில் கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர் இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உட்பட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக குடியாத்தம் பகுதிக்கு வந்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வரவேற்பு அளிப்பதற்காக கட்சித் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சிக்கு பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்களா இல்லையா என்பது பிஜேபிக்கு தான் தெரியும்.
இந்தியா கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள்.
யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பது தெளிவான பிறகு தான் தெரியும்.
இந்தியா கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு வருவாரா? என கேட்டதற்கு
அதற்கு நான் பதில் சொல்ல முடியாது எங்களுடைய தலைவர் தான் பதில் அளிப்பார். சரத் பவார் மற்றும் சந்திரபாபு நாயுடும் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அது பற்றி நமக்கு தெரியாது என்று பதிலளித்தார்.