வேலூரில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி

84பார்த்தது
வேலூரில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள். மூத்த மகள் சிவானி (வயது 13) அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் நிரஞ்சனா (11) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

 இந்த நிலையில் சிவானி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 7-ந் தேதி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி