வேலூர்மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதி வண்டி மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கு விழா மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மாமன்ற உறுப்பினர் அன்பு, மண்டல குழு தலைவர் புஷ்பலதா, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் 11 ஆம் வகுப்பு பயிலும் 10500 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 11. 5 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டியை இந்த ஆண்டு வழங்கவுள்ளோம் 89500 மாணவ, மாணவிகள் அரசு பள்ளியில் பயிலுவோருக்கு இலவச சீருடையும் இக்கல்வி ஆண்டில் வழங்கவுள்ளோம் அதனை துவங்கியுள்ளோம் என பேசினார்.