பிரதமர் மோடி 3 வது முறையாக பதவி ஏற்றதற்காக பட்டாசு வெடிப்பு

77பார்த்தது
கே வி குப்பம் ஜூன் 10 - கேவி-குப்பம் அடுத்த லத்தேரியில் கேவிகுப்பம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் பிரதமர் மோடி 3 வது முறையாக பாரதப் பிரதமர் பதவி ஏற்பதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய மையக் குழு மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அனைத்து பிரிவுஅணி நிர்வாகிகள் உள்பட நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கே வி குப்பம்: கே வி குப்பம் பஸ் ஸ்டாண்டில் , மேற்கு பாஜக ஒன்றிய தலைவர் ஈஷா சங்கர் தலைமையில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் முருகேசன் விவசாயி செயலாளர் சீனிவாசலு பொருளாளர் மோகன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி