வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டமானது நடந்தது இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் அரசு அறிவித்த படி இலவச வண்டல் மண் அள்ளிகொள்ள அனுமதித்ததை வரவேற்கிறோம் ஆனால் விவசாயிகள் அல்லாத சிலர் மண் திருட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது இதனை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் மேலும் பேர்ணாம்பட்டு பகுதிகளில் குடிநீர் குடிக்க முடியாத நிலை உள்ளது மேலும் பாலாற்றிலும் மணல் கொள்ளையால் பாலாற்றில் உள்ள கிணறுகளும் வற்றிய நிலையில் உள்ளது மேலும் வனவிலங்குகள் வராமல் இருக்க விவசாயிகள் வேலிகளையும் சோலார் தடுப்புகளை அமைக்கின்றனர் ஆனால் வனத்துறை ஐந்து கிலோமீட்டருக்கு அருகிலுள்ள நிலங்களில் அவ்வாறு அமைக்க அனுமதியில்லை என கூறிவதை ரத்து செய்ய வேண்டும் ஏற்கனவே வேலி மற்றும் சோலார் அமைத்தவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் மேலும் வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பேசினார்கள்