வேலூர் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் முதல்வர் மருந்தகம்

70பார்த்தது
வேலூர் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் முதல்வர் மருந்தகம்
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஏழை மக்கள் பலர் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டி உள்ளது. இதனால் அவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதால் அதற்கு தீர்வாக மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்த மருந்தகம் பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

முதல்கட்டமாக தமிழகத்தில் ஆயிரம் மருந்தகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்திலும் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

தொடர்புடைய செய்தி