வள்ளிமலையில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

566பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவில் உள்ளது இங்கு இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்காக பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது அப்போது இசைக்கச்சேரிகள் நாடகங்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நேற்று காலை உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி மலைக்கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பின்னர் மலைக்கோவிலில் இருந்து உற்சவர்களை கீழே இறக்கி சிறப்பு பூஜைகள் செய்து தேரில் ஏற்றும் நிகழ்வு காலை 11 மணியளவில் நடைபெற்றது வள்ளிமலையை சுற்றி 4 நாள் தேரோட்டம் நடைபெறும் முதல் தேரோட்டமான நேற்று மாலை 5 மணி அளவில் சின்ன கீசகுப்பம் துண்டுகரை. பகுதியிலும் இரண்டாம் நாள் சோமநாதபுரம். பகுதியிலும் மூன்றாம் நாள் பெருமாள் குப்பம். பகுதியிலும் நான்காம் நாள் தேர் நிலையை வந்து அடைதல் நிகழ்வு நடைபெறும் என்பதால் காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் தீயணைப்பு துறை சுகாதாரத்துறை மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி