வேலூரில் கூடைப்பந்து தேர்வு போட்டி

61பார்த்தது
வேலூரில் கூடைப்பந்து தேர்வு போட்டி
தமிழ்நாடு அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான தேர்வு போட்டிகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் வேலூர் பெரியார் பூங்கா வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இதில் 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் தங்கள் பள்ளி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை வேலூர் மாவட்ட கூடைப்பந்து தலைவர் கனக ராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி