லப்பேரி அருகே லோடு லாரி மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி

66பார்த்தது
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவி இவருக்கு வயது (55) இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகின்றார் என்ன நிலையில் என்று திருவண்ணாமலையிலிருந்து கே வி குப்பம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு தனது ஆட்டோவில் வந்து கொண்டு இருந்துள்ளார் இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பனமடங்கி கூட்டு சாலை அருகே வந்து கொண்டிருந்த பொழுது எதிரே உரம் ஏற்றி வந்த லாரி மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ரவியின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அடுத்து அருகில் உள்ள லத்தேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ரவியின் உடலைப் பார்த்து அவர்களது உறவினர்கள் கருதரி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது

தொடர்புடைய செய்தி