வேலூர் மாவட்டம் காட்பாடி போலீசார் இரவு வள்ளிமலை கூட்டுப்பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டதில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா, பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் காரில் இருந்த வில்லியம், லீலாதரன், ரகுநாதன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.