வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆஸ்கார் இண்டிபெண்டன்ட் அருகில் கடந்த இரவு 8: 45 மணிக்கு இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது பின்னால் அமர்ந்திருந்தவர் செல்போன் பேசிக்கொண்டு வந்தனர் திடீரென்று மூன்று பேர் பின் தொடர்ந்து வந்து அவர் பேசி இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓடும் போது ஒருவர் எதிரே உள்ள கால்வாயில் விழுந்த போது பலத்த காயம் ஏற்ப்பட்டது அவரை அருகில் இருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மற்றொருவர் காட்பாடியில் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து இருவர் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர் மற்றொருவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் பிற்பகல் 3: 00 மணியளவில் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் அந்த இடத்தில் சந்தேகம் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து விசாரணை செய்தனர். உடனே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது வேலூர் சேன்பாக்கம் துரோபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் மனுஷ் (எ) மேகநாதன் வயது-20 என்பது தெரியவந்தது கடந்த மாதம் செல்போன் வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது உடனே அவர் மீது காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது அடிப்படையில் நீதிமன்ற முன்னிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.