வேலூர்: பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

72பார்த்தது
வேலூர்: பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் சேகர் (வயது 32), பெயின்டர். இவருடைய நண்பர் நவீன்குமார் (33). கடந்த 1-ந் தேதி சேகர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த நவீன்குமார் அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும் என்று கூறி சேகரிடம் இருந்து செல்போனை வாங்கி உள்ளார். அதன்மூலம் பேசிய நவீன்குமார் அந்த செல்போனை கொடுக்காமல் எடுத்து சென்றுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த சேகர் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று செல்போனை கேட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்கு வாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நவீன்குமார் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து சேகரின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து நவீன்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் திருப்பதியில் இருந்து ரெயிலில் வேலூருக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் வைத்து நவீன்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி