டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

51பார்த்தது
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
திருவலம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தது தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலி ஓட்டுனர் கைது.


காட்பாடி தாலுகா திருமணத்தை அடுத்த வெள்ளைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவர் இளையநல்லூர் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றும் கூலி வேலைக்கு சென்றுள்ளார். வைகோலை ஏற்றுக் கொண்டு வெங்கடேசன் டாக்டரை ஓட்ட கிருஷ்ணன் டிராக்டர் இன் முன் பக்கமாக அமர்ந்து கொண்டு வந்துள்ளார். குப்பிரெட்டி தாங்கள் பகுதியில் சென்ற பொழுது நிலை தடுமாறி கிருஷ்ணன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் டிராக்டரின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி மேல்பாடி சப்-இன்ஸ்பெக்டர் தருமன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த மேற்படி போலீசார் டிராக்டர் ஓட்டி சென்ற வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி