குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பழனி மற்றும் ரேகா இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உள்ளன. இந்நிலையில் மூத்த மகன் கிரித்திக் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளித்திறந்து முதல் நாள் எட்டாம் வகுப்பிற்குச் சென்றான். பின்னர் ஸ்கூல் பேக் வாங்கி தரும்படி தாய் ரேகாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. தாய் ரேகா அப்பா வேலைக்கு சென்று வந்தவுடன் நாளை பேக் வாங்கி தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தாயிடம் இப்பவே ஸ்கூல் பேக் வாங்கி தரும்படி அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த கிரித்திக் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கதவை உடைத்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கிரித்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கிரித்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கிரித்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வீட்டை குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் குடியாத்தம் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.