பேரணாம்பட்டு: பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

66பார்த்தது
பேரணாம்பட்டு: பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணபதி (33), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தன்னுடைய பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் நேற்று வந்து பார்த்த போது பைக் திருடு போயுள்ளது. இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருட்டில் ஈடுபட்ட, அபரார் ரஹ்மான் (19), பரான் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி