காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

64பார்த்தது
காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
காட்பாடி தாலுகா பள்ளிகுப்பம் கீழ்மோட்டூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70), விவசாயி. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். ராணிப்பேட்டை ஆற்காட்டில் வசித்து வந்த சுப்பிரமணியின் நெருங்கிய உறவினர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரை பார்ப்பதற்காக சுப்பிரமணி மற்றும் குடும்பத்தினர் கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். 

இதற்கிடையே உறவினர் திடீரென இறந்துவிட்டதால் சுப்பிரமணி மற்றும் குடும்பத்தினர் ஆற்காட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் தங்கி துக்கநிகழ்வு மற்றும் அதனையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்தநிலையில் அங்கிருந்து நேற்றுமுன்தினம் மாலை கீழ்மோட்டூர் திரும்பினர். வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அறைகள் முழுவதும் துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறிகிடந்தன. பீரோக்களின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி