காட்பாடி கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் காட்பாடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. வேலூர் மின் பகர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மதியழகன் தலைமை தாங்குகிறார். இதில் காட்பாடி தோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்களும் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயனடையலாம் என இந்த தகவலை காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.