பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

559பார்த்தது
வேலூர் மாவட்டம்

காட்பாடி பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


தேர்தல் பத்திரம் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு எந்தெந்த கட்சிகளுக்கு யார் யார் நிதி வழங்கினார்கள் என்ற விவரத்தை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால் இதுவரை நிதி அளித்தவர்களின் விவரத்தை வங்கிகள் அளிக்க மறுப்பதாகவும்.
தேர்தல் பத்திரம் மூலம் நிதியைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட மோடி அரசின் ஊழலை கண்டித்தும், மோடி அரசின் ஊழலை மறைக்க துணை போகும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே காட்பாடி காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ஜார்ஜ் (எ) இளங்கோ தலைமையில், காட்பாடி வடக்கு ஒன்றிய வட்டார தலைவர் ஜி. கே. கணேஷ் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக சித்ரஞ்சன் உட்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி நிதி வழங்கியவர்களின் விவரத்தை அளிக்க வேண்டும் என்றும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கே. எஸ். ரவி, தீனா (எ) தீனதயாளன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி