பரிதாபமாக சரிந்து விழுந்த தேர் இருவருக்கு கத்தி குத்து

8651பார்த்தது
வேலூர் பாலாற்றங்கரையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர் மோட்டூர் வெண்மணி ஆகிய பகுதிகளை சேர்ந்த சூரையாடல் முடிந்து 3 தேர்கலும் திரும்பும் சமயம் மோட்டூர் வெண்மணி பகுதியை சேர்ந்த தேர் திரும்பும் போது எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது.

விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். பின்னர் அவரை மீட்ட பொது மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளால் தேர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விருதம்பட்டு பகுதியில் இருந்து வேலூர் பாலாற்றுக்கு தேர்கள் வரும் போது ஒரு தேரின் முன்னாள் சில இளைஞர்கள் பெண்களுக்கு இடையூறாக நடனம் ஆடியதாக தெரிகிறது. இதைப் பார்த்த கழிஞ்சூர் கார்த்தி, ஒருவர் அவர்களை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவர் திடீரென கத்தி மற்றும் பிளேடால் இருவரையும் குத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி