உறுமலுடன் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை

1045பார்த்தது
குடியாத்தம் ராமாலைக்கு உட்பட்ட காந்தி கணவாய் கிராமம் வனப்பகுதியை ஒட்டியுள்ளது இந்த பகுதியில் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஜே. ஜே. நகர் அருகே 10க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை 2 நாட்களாக காந்தி கணவாய் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள புதர் பகுதியில் பதுங்கி உறுமிக் கொண்டு இருந்துள்ளது இந்த இந்த உறுமலின் சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் அலறி அடித்து வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டனர்.

இதனை அடுத்து அப்பகுதி இளைஞர்கள் திரண்டு தீ பந்தம் கொளுத்தியும் பட்டாசு வெடித்தும் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் மலை அடி வாரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மாடு மேய்க்க சென்றனர். அப்போது மலை குன்றின் மீது சிறுத்தை அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து மாடுகளை வீட்டுக்கு ஒட்டி வந்தனர்.

இந்த நிலையில் நிலப் பகுதிக்குள் சிறுத்தை சென்ற கால் தடம் ஆங்காங்கே இருந்துள்ளது இதனால் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை எந்த நேரத்தில் வருமோ என்ற பீதியில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அங்கு வந்து சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி