காட்பாடி அக்ஸிலியம் மகளிர் கல்லூரியில் 64வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஆக்ஸிலியம் மகளிர் கல்லூரியில் உள்ள கலையரங்கில் 64-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு முனைவர் அருட்சகோதரி. அவர் மேரி ஜோஸ்பின் ராணி முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி. ஜெயசாந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்
இதில் சிறப்பு அழைப்பாளராக வி. ஐடி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி. வி செல்வம் கலந்து கொண்டு 942 இளங்கலை மாணவியர்களுக்கும், 216 முதுகலை மாணவியர்களுக்கும், 8 ஆய்வியல் ஆராய்ச்சி மாணவியர்கள் என மொத்தம் 1, 166 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் அருட் சகோதரி அமலா வளர்மதி, அருட்சகோதரி ஜூலியானா ஆக்னஸ் விக்டர், மற்றும் அனைத்துதுறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்