*ஜோலார்பேட்டையில் மகளிர் சுய உதவி குழு தின விழா! 5535 பயனாளிகளுக்கு 49 கோடியே 14 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நல திட்ட உதவிகள்! சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை வாங்கிச் சென்ற கலெக்டர்*
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள நந்தினி திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் மகளிர் சுய உதவி குழு தின விழா நடைபெற்றது.
இதில் மகளிர் சுய உதவி குழு தினவிழாவில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 483 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 5535 பயனாளிகளுக்கு 49 கோடியே 14 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 32 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 36 கோடியே 20 லட்சம் நேரடி வங்கி கடன் மற்றும்
50 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி 72 லட்சத்து 50 ஆயிரம் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மேலும் நகர்புறப் பகுதிகளில் உள்ள 131 மகளிர் சுய உதவி குழுவுக்கு 12 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டிலான வங்கி கடன் வழங்கப்பட்டது