காஷ்மீரில் திருமணம்: காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!

67பார்த்தது
காஷ்மீரில் திருமணம்: காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்தவர் தவுலத். இவரது மகள் சுமையா பேகம் (22). திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்தவர் தங்கத்தமிழன். ஐ. டி. ஐ. படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரும், சுமையா பேகமும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே தெருவில் வசித்துவந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சுமையா பேகம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சுமையா பேகத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காதல் ஜோடி விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் சென்று டி. நகர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அங்கிருந்து மீண்டும் விமானம் மூலம் வந்த ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர் சுமையா பேகத்தை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி