நாட்டறம்பள்ளியில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு

51பார்த்தது
நாட்டறம்பள்ளியில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு
பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். நேற்று நடந்தது 108-வது மாதத்தின் மனதின் குரல் நிகழ்ச்சி ஆகும். இதனை பொதுமக்கள் கேட்கும் வகையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 38-வது பூத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலரும், பா. ஜனதா ஒ. பி. சி. அணி மாநில செயற்குழு உறுப்பினருமான இல. குருசேவ் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பிரதமர் மோடியின் உரையை கேட்டு மகிழ்ந்தனர். அவர்கள் அனைவருக்கும் இல. குருசேவ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி