MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ இளநிலைப் படிப்புகள் சேருவதற்கான நீட் (UG) தேர்வு முடிவு வரும் ஜூன் 14-க்குள் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு ஆன்சர் கீ தொடர்பான ஆட்சேபனைகளுக்கு ஜூன் 5 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் பைனல் ஆன்சர் கீ வழங்கப்பட்டு, அதன்பின் விரைவாக தேர்வு முடிவும் வெளியிடப்படும். நாடு முழுவதும் சுமார் 20.8 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.