நகைக்கடையில் நகை வாங்குவது போல நாடகமாடி 70 கிராம் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெரு பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் விநாயகம் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் சஞ்சீவ்வை நகைக்கடையில் விட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்பொழுது கடைக்கு வந்த பெண் ஒருவர் தனக்கு கம்மல் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனை நம்பிய சஞ்சீவ் அங்கிருந்த கம்மல்களை எடுத்துக்காட்டியுள்ளார். அப்பொழுது அந்தப் பெண், 70 கிராம் கம்மலை தனது புடவையில் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த சஞ்சீவ் உடனடியாக தனது அப்பாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விநாயகம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி பதிவுகளை வைத்து 70 கிராம் கம்மலை எடுத்துச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.