வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்றவர் கைது!

78பார்த்தது
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்றவர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கீழ்பனந்தோப்பு தண்ணீர் டேங்க் அருகே முகமது அலி (வயது 44) என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த ½ கிலோ கஞ்சா மற்றும் ரூ. 30 ஆயிரத்தை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் முகமது அலியை பிடித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :