பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என்று மனமடைந்து தற்கொலை

75பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம்

*ஜோலார்பேட்டை அருகே பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என மனமுடைந்த மனைவி திருமணமான ஒன்பது மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை! கணவனை விஷம் குடித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி! *

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியைச் சேர்ந்த சாமன்னன் மகன் சந்தோஷ்(28) இவருக்கும் இவருடைய உறவு முறையான ஏழுமலை என்பவருடைய மகள் பவித்ரா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த நிலையில் பெண் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட மிகவும் கோபப்படுபவர் என்று தெரிகிறது இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பவித்ரா தனது கணவனான சந்தோஷிடம் பொங்கலுக்கு துணி எடுத்து வரலாம் என அழைத்ததாக கூறப்படுகிறது.

இதனை கணவன் தட்டி கழித்ததாகவும் கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த மனைவி பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஒரு தனி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கதவு திறக்கப்படாத நிலையில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you