ஆம்பூர் அருகே ஆடிக்கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை.

72பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் கிராமத்தில் அருள்மிகு மயிலாடுமலை திருமுருகன் திருக்கோவிலுக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முருக பக்தர்கள் பால்குடம் மற்றும் சந்தனகுடம் எடுத்து 4000 அடி கடல் மட்டத்திலிருந்து இருந்து ஊர்வலமாக சென்று மலை உச்சியில் உள்ள ஆலயத்திற்கு சென்று மூலவர் முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது இதில் மூலவர் முருகப்பெருமான் மற்றும் உற்சவருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூக்களாலும் வண்ண மலர்களாலும் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பொன் ஆபரணங்கள் அணிவித்து தலையில் கிரீடம் சூட்டி கையில் வேல் ஏந்தி உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன இந்த நிகழ்ச்சியில் முருக பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷம் எழுப்பி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி