*நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து மூன்று பள்ளி மாணவர்கள் எதிரே வந்த பள்ளி மாணவிகள் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு. *
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் திறனாய்வு தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்க இருந்த நிலையில்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருந்த தமிழ்நாடு அரசின் திறனாய்வு தேர்வு எழுதுவதற்காக பச்சூர் அரசு பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் நாற்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டு அதிவேகமாக பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.
அப்போது எதிரே வந்த கேத்தாண்டப்பட்டி அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள் மீது நேருக்கு நேர் மோதி அனைவரும் தலைக்குப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.
அதில் ஒரு மாணவிக்கு தலை நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாற்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததை தொடர்ந்து தலையில் சுமார் ஐந்து தையல்கள் போடப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்பு மீண்டும் திறனாய்வு தேர்வு எழுத மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.