தங்கள் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து வேண்டி பொதுமக்கள் மனு.
திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் கிராமத்தில் வசித்து வரக்கூடிய கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் அலுவலக பணியாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலக பணியாளர்கள் கூட்டுறவு பணியாளர்கள் நியாயவிடை கடை உரிமையாளர்கள் போன்ற அலுவலக வேலைகளுக்கு செல்லக்கூடிய நபர்களுக்கு சரியான நேரத்திற்கு அப்பகுதியில் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூடுதலாக அப்பகுதிக்கு பேருந்து வசதி வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மனு அளித்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர்.