வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (மார்ச்.19) நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி சந்திரதாசன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார். இதில், 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.