திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாம்பள்ளி அடுத்த அம்மங்கோவில் பகுதியில் அமைந்துள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் சிவமுத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே மூவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.