தேனீ கடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

53பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சின்ன கிரி சமுத்திரம் பகுதியில் வசித்த வடிகி கவுண்டர் என்பவர் இன்று உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அவரின் சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று சின்ன கிரி சமுத்திரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அடுத்தடுத்து வைக்கப்பட்ட அதிக புகை வரக் கூடிய பட்டாசு வெடிக்கப்பட்டதின் காரணமாக புகையின் தாக்கத்தால் தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் வெளியேறி சவ ஊர்வலத்தில் பங்கு பெற்ற சுமார் 20க்கும் மேற்பட்ட பொது மக்களை கடித்ததின் காரணமாக அனைவரும் அங்கிருந்து அலறி அடித்து ஓடி உள்ளனர்.

பின்பு அனைவரும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பழனி மற்றும் பரமசிவம் என்கிற இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் பதற்றத்துடன் கூடிய பரபரப்பு காணப்பட்டது.

மற்றவர்கள் அனைவரும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி