ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பம் மாற்றித் தர பொதுமக்கள் மனு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சி காலனி பகுதியில் கோவில் தெருவில் வசித்து வரக்கூடிய பொது மக்கள் தெருவில் ஏற்கனவே மின்கம்பம் உள்ளதால் 5 அடி தான் பள்ளம் இருக்கிறது. தற்பொழுது சில மாதங்களுக்கு முன்பு கட்டிய புதிய கழிவுநீர் கால்வாயால் தற்பொழுது 2 அடி மட்டுமே உள்ளது.
புதியதாக கட்டிய கழிவுநீர் கால்வாய் தெருவின் ஓரத்தில் கட்டாமல் தெருவின் நடுவில் கட்டி உள்ளனர். கால்வாயின் அகலமும் சீராக இல்லாமல் ஒரு இடத்தில் பெரியதாகவும் ஒரு இடத்தில் சிறியதாகவும் ஒழுங்கற்று உள்ளது. இதனால் நாங்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருப்பதாகவும் அபாயமான தெருவில் எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு மிதிவண்டியில் செல்லும் பொழுது கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்துள்ளது இந்த வழியில் நாங்களும் எங்களது குழந்தைகளும் சென்று வரும்போது ஒரு நாள் தவறி இந்த வழியில் நாங்களும் எங்களது குழந்தைகளும் சென்று வரும்போது ஒரு நாள் ஒருநாள் தவறு விழும் அபாயமும் உள்ளது.
அபாயம் ஏற்படும் முன் மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் கழிவுநீர் கால்வாய் மீது சமமான கல்லை போட்டு சிமன்சாலையாக மாற்றி தர வேண்டும்.