தி. மலை - கிரிவலப் பாதை சுற்றி பள்ளம் தோண்ட வேண்டாம்! -மின்சார துறை அறிவிப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் ஆலயத்தை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகளில் பெருநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வரும் தரைவழி மின்சார சேவை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லும் எனவும், பொதுமக்கள் அறிவிப்பின்றி யாரும் பள்ளம் தோண்ட வேண்டாம் என்றும் மின்சார வாரியம் அதிகாரிகள் தெரிவித்தனர்.