*ஜோலார்பேட்டையில்உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். *
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான மரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பங்கு பெற்று போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 25க்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மாரத்துன் நெடுந்தூர ஓட்ட போட்டி நடைபெற்றது.
அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும் உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் பெண்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவு ஆண்களுக்கு 25க்கு உட்பட்டவர்களுக்கு எட்டு கிலோமீட்டர் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு முறையே ரூபாய் 5000 , 3000 மற்றும் 2000 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பத்தாம் இடம் வரை பெறுபவர்களுக்கு ரூபாய் ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.