அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா ஆட்சியர் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழாவினை கொண்டாடும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தது போக சுரக்கும் தாய்ப்பாலை தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தாய்மார்களிடம் கேட்டுக் கொண்டார்.
உடன் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கண்ணகி, மாவட்ட சுகாதார அலுவலர் சித்ரசேனா, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சிவகுமார், மாவட்ட தாய் சேய் நல மருத்துவர் பியூலா மற்றும் துறையை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.