*தமிழே ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். *
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற தமிழே ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி என 1956 இல் சட்டம் இயற்றப்பட்டதை உணர்த்தி தமிழில் 5 மடங்கிலும் ஆங்கிலத்தில் 3 மடங்கிலும் தேவைப்பட்டால் பிற மொழியில் 2 மடங்கிலும் பெயர் பலகை அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அன்னைத் தமிழே ஆட்சி மொழி தமிழில் பெயர் பலகை அமையட்டும் தமிழ்நாட்டின் வீதி எல்லாம் தமிழ் தழைக்கட்டும் உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பொறுப்பு திட்ட இயக்குனர் விஜயலட்சுமி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.