பைக்கில் வந்து மூதாட்டியிடம் 7 பவுன் பறிப்பு!

61பார்த்தது
பைக்கில் வந்து மூதாட்டியிடம் 7 பவுன் பறிப்பு!
வேலூர், காந்திநகர், புத்தர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கரிகிரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர் தனது தாய் மீராபாயுடன் சுரேஷ் குமார் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். வேலூர் பாலாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது இவர்களது பின்னால் 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர்.

அவர்கள் கர்சீப்பால் முகத்தை மறைத்து இருந்தனர். திடீரென மீராபாயிடம் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். பையில் 7 பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். முகத்தில் கர்சீப்பை கட்டிக் கொண்டு வந்து மூதாட்டியிடம் அதிகாலையில் நகையை பறித்துச் சென்ற சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி