வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை!

60பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மதன். இவர் புதுப்பேட்டையில் உள்ள அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த வாரம் மதன் பயிற்சிக்காக பொள்ளாச்சி சென்றுள்ள நிலையில், இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மதன் மனைவி மற்றும் குடும்பத்தார் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி