ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பின்புறம் ஆறடி உயர்த்திற்கு மூன்று கஞ்சா செடிகளை வளர்த்த முதியவரை கைது செய்து போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய மூக்கனூர் பகுதியில் வசிப்பவர் பலராமன் மகன் பன்னீர் (52). இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பன்னீர் தன்னுடைய வீட்டிற்கு பின்புறம் சுமார் 6 அடி அளவிற்கு மூன்று கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக ஜோலார்பேட்டை காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாலை 4 மணிக்கு அவருடைய வீட்டிற்கு சென்று கஞ்சா செடிகளை அழித்து அதை வளர்த்து வந்த பன்னீரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இதே போன்று வேறு எங்காவது கஞ்சா செடிகளை வளர்த்து வருகிறாரா என்பது போன்ற பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பொருட்டு ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.