திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திருமஞ்சோலையில் ஆபத்தான முறையில் இருக்கும் மின் கம்பம் குறித்து பலமுறை புகார் அளித்தும் மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சாய்வாக இருக்கும் இந்த மின் கம்பம் மக்களின் மீது விழுந்து விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.