பெங்களூரில் இருந்து திருப்பத்தூருக்கு இருசக்கர வாகனம் பழுது பார்க்க வந்த நபரின் இருசக்கர வாகனம் மோதியதில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆம்பூரில் உள்ள உமராபாத் மதுக்குமார் (வயது 34) பிரபு (வயது 36) ஆகிய இருவரும் எஸ்பி அலுவலகத்திற்கு காவல் நிலைய வேலை சம்பந்தமாக வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூர் பகுதியை சார்ந்த மந்தூஷ் (வயது 42) இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க பெங்களூரில் இருந்து திருப்பத்தூருக்கு வரும் பொழுது ஆசிரியர் நகரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காவலர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அடிபட்ட காவலர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.