சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் ஊராட்சியில், தொடக்கப்பள்ளி அருகே வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் பொதுக்குழாய்கள் அமைக்கவும், வீட்டிற்கு ஒரு குடிநீர் இணைப்பு வழங்கவும் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் இருந்து ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணிக்கான தொடக்க விழா போளிப்பாக்கத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இ. செல்வம் ஆகியோர் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில், துணைத் தலைவர் நாராயணன், வார்டு உறுப்பினர்கள் பபிதா, ரவி, பச்சையம்மாள், தண்டபாணி, சரவணன், மன்னார், முருகன், தருமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.