மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

50பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா புதுப்பாடி ஊராட்சியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 3 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள் என் 4 பேருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதிய தேசிய அடையாள அட்டைகள் 104 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச்சான்று 104 பேரும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கேட்டு 6 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு 9 பேரும் விண்ணப்பித்தனர். மேலும் வங்கிகடன் மானியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தனர்.

முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட இணை இயக்குனரின் (சுகாதாரப் பணிகள்) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறப்பு டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி