ஆற்காடு அடுத்த தாழனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வசந்தகுமார் என்கிற குட்டி (வயது 44). இவரது அலுவலகம் ஆற்காடு எம்.ஜி.ஆர். சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ளது. அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வசந்தகுமார் அலுவலகத்திற்கு முன்பாக நின்று கொண்டு நோட்டமிட்டுள்ளனர். இதனைப் பார்த்த வசந்தகுமார் அவர்களிடம், இங்கே எதற்கு நிற்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு தனியார் பைனான்சில் தங்க நாணயம் வாங்க வந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். மேலும் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, 2 வாலிபர்களும், வசந்தகுமாரை பாட்டில் மற்றும் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த அருண் (38), ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (27) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.