ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியர் சந்திரகலாவுக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஆற்காடு போலீசார் சோதனை நடத்தியதில் சம்பந்தப்பட்ட கடையில் குட்கா விற்றது தெரிந்தது. அலுவலர் ரவிச்சந்திரன் கடைக்கு சீல் வைத்து ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.